Search This Blog

Wednesday, July 20, 2011

ஐ யம் கலாம் ( i Am KALAM ) - சினிமா விமர்சனம்


"எதிர்காலம் பற்றிய லட்சியக் கனவுகளை சிறிய வயதிலேயே காணுங்கள்". என  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார். அந்த வார்த்தைகளையே கருவாக வைத்து, உருவாகி இருக்கிறது 'ஐ யம் கலாம்’ என்ற திரைப்படம்.

 கதை..


சோட்டு என்ற  சிறுவன் தன் குடும்ப பாரத்தைச் சுமக்க, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு, ராஜஸ்தானின் சாலையோர  ஓட்டலில் வேலை செய்கி றான். ஒரு முறை டிவியில்  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'சிறு வயதில் தான் கடைகளில் பேப்பர் போட்டு வளர்ந்தேன்’ என்று சொல்வதைக் கேட்கிறான். சோட்டுவும் எதிர்கால கனவில் மூழ்குகிறான். நன்கு படித்து, எதிர்காலத்தில் கோட், சூட், அணிந்து வேலைக்குச் செல்வதைபோல் கனவு காண்கிறான். தன் பெயரையும் கலாம் என்றே மாற்றி வைத்துக் கொள்கிறான். 

சுட்டி சோட்டு சுறுசுறுப்பு, புரிந்துகொள்ளும் திறமை, ஓட்டல் உரிமையாளரான பட்டிக்குப்  பிடித்துப் போய்விடுகிறது. சாப்பிட வருவோரிடம் சோட்டு நன்கு சிரித்துப் பேசி, கவர்வதால், வாடிக்கை யாளர்கள் பெருகுகின்றனர். அந்த ஓட்டல், அங்கே ராஜ குடும்பத்தின் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ளது. ராஜ குடும்பத்தின் சிறுவனான ரண் விஜய். அந்தப் பரம்பரையின் இளவரசன் என்பதால், உடன் பிறந்த  சகோதரிகளுடன்கூட விளையாட அனுமதி இல்லை.


இதனால், தனித்து விடப்பட்ட விஜய், சோட்டுடன் ரகசியமாக நட்பு வைத்துக் கொள்கிறான். ஒருநாள் உரிமையாளரான பட்டி, சோட்டு மீது தவறாக திருட்டுப் பழி சுமத்துகிறார். யாருமே சோட்டுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதனால், ஓட்டலை விட்டு வெளியேறிவிட்டாலும் சோட்டுக்கு, தன் இலட்சியக் கனவு ஒருநாள் நிறைவேறும் என்பதில் உறுதி குலையவில்லை. சோட்டு கனவு நிறைவேறுகிறதா?


ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரப்போகும் இந்தப் படம், அதற்கு முன்பாகவே... ஆறு விருதுகளைப் பெற்றுவிட்டது. குறிப்பாக, படத்தின் நாயகனாக சிறப்பாக நடித்த 'ஹர்ஷ் மயார்’ சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்று இருக்கிறான்.

டெல்லியைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் 'ஸ்மைல் ஃபவுண்டேஷன்’ சமூகத் தொண்டு நிறுவனம்தான் படத்தைத் தயாரித்து இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுக்கான படம்  எடுக்கத் திட்டமிட்டது. லீலா மாத்தப் பாண்டா எனும் ஹாலிவுட்டின் பிரபல டாக்குமெண்ட்ரி இயக்குனர்தான் இந்தப் படத்தின் இயக்குனர். 

ஸ்மைல் ஃபவுண்டேஷன் தயாரித்த 'ஐ யம் கலாம்’, உலகளவில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. அதில், ஜெர்மனியின் 'லூகாஸ் இன்டர்நேஷனல் திரைப்பட’ விருது மற்றும் இன்டர் நேஷனல் சினி கிளப் ஃபெடரேஷனின் 'டான் க்யூக்சோட்’ விருது, கோவாவில் நடந்த அகில உலக திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'யங் ஜூரி’ விருது, பார்பிகான் லண்டனின் குழந்தைகள் திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'ஆடியன்ஸ் ஃபேவரைட்’ விருது ஆகியவை முக்கியமானவை.   கூகுள், விக்கி பீடியா, விகடன் 

No comments:

Post a Comment