Search This Blog

Friday, July 22, 2011

காசியில் ஒரு நாள் ..


மதியம் மூன்று மணி நாற்பது நிமிடத்திற்கு, வண்டி வாரணாசி நோக்கி கிளம்பியது. சுமார் ஆறு மணியளவில் வாரணாசி வந்து சேர்ந்தேன் . நேராக ஒரு தங்கும் விடுதிக்கு சென்று ரூம் புக்கிங் செய்தேன் . நல்ல வசதியான ரூம். மூன்று பேர் தாராளமாகத் தங்கலாம். சுத்தமாகவும் இருந்தது. (hotel raj mahal). விலை ரொம்ப கம்மி. பின்னர் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு "கங்கை ஆரத்தி" காணச் சென்றேன் . எந்தப் படித்துறை ன்னு கேக்க மறந்துட்டேன்....ஆனா கங்கை ஆரத்தி நன்றாக இருந்தது. ஸ்ராவண மாதப் பிறப்பு என்பதால் வாரணாசியில் கூட்டம் அதிகமாக இருந்தது.  
 
 
அங்கு ஸ்ரீ கேதார கௌரி சமேத ஸ்ரீ கேதாரநாதர்  ஸ்வாமியை பார்த்து விட்டு, கோபுரத்தில் மீனாக்ஷி பிள்ளைத் தமிழ் அருளிச் செய்த ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகளின் திரு உருவச் சிலை பார்த்தேன் ....ரொம்ப இருட்டா இருந்ததால...காலம்பர மறுபடி வரணும் ன்னு நினைத்துக் கொண்டு  உள்ளே சென்று ஸ்வாமியை பார்த்தேன் . நம்ம ஊர் கோயில் ல இருக்கும் அம்பாள் போலவே இருந்தாள்... நம்ம ஊர் ஸ்டைல் ல இருந்தது கேதார் காட் கோயில். சரி அடுத்து இரவு சாப்பாடு எங்கே, ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். அவர் சொன்னார் இங்கே புதிதாக ஒரு ஹோட்டல் இருக்கு. நல்லா இருக்கும் . சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது. அந்த ஹோட்டல் பெயர்  (hotel silver spoon) .
இறந்து போன நபர்களுக்கு காசியில் எதோ செய்வாங்க என்று கேள்வி பட்டேன். அப்போ, வழக்கம் போல் நினைவில் வந்தார் தந்தை. அம்மாவிடம் விருப்பதை சொன்னேன். உன்னக்கு என்ன தோணுதோ அதை செய். பத்திரமாக கான்பூர் போய் சேர்.. ஊர் சுற்றாதே என கடிந்து கொண்டார்.காலை 5 .30 மணிக்கு எழுந்து குளித்து...ஏழரை மணியளவில் ரூமிலிருந்து கிளம்பி கங்கை சென்று நீராடிதந்தைக்கும் பிண்டம் வைக்கச் சொன்னார்கள்.பண்டிதர் சொன்ன இடத்தில் அமர்ந்து அவர் சொன்ன வண்ணம் செய்து முடித்தேன்.  
 
அங்கிருந்து பதினொரு மணியளவில் "ஹனுமான் காட்" டில் உள்ள "ஸ்ரீ சக்ர லிங்கேஸ்வர" ஸ்வாமியை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு அங்கிருந்து காசி விஸ்வநாதரை பார்க்க கிளம்பினேன். ஸ்ராவண மாதப் பிறப்பு என்பதாலும், அடுத்தநாள்...முதல் சோமவாரம் என்பதாலும் கூட்டம் ஏகத்துக்கு இருந்தது. கொண்டு சென்றிருந்த அலைபேசி, மற்றும் பைகளை ஒரு கடையில் வைத்து விட்டு பூ, பிரசாதம் வாங்கிக் உள்ளே அழைத்துச் சென்று சேவிக்கப் பண்ணுவதாக வயதான பண்டிதர் ஒருவர் சொன்னார். முதலில் துண்டி கணபதியை பார்த்து விட்டு அங்கிருந்து ஸ்ரீ அன்னபூரணி அன்னையை பார்த்து விட்டு காசி விஸ்வநாதரை பார்க்க சென்றேன். ரொம்ப நீண்ட வரிசை அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "போல் பம், போல் பம்" ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஞான வாபி என்னும் மசூதியைக் காட்டினார், அந்த பண்டிதர். அது தான் பழைய விஸ்வநாதர் கோயில் என்றும், முகலாயரின் படையெடுப்பின்போது கோயில் இடிக்கப்பட்டு, மசூதி எழுப்பப் பட்டதாகக் கூறினார். (மசூதிக்குள் செல்ல அனுமதி இல்லை...அந்தபக்கம் முழுதுமே அடைத்துள்ளார்கள்). முன்னாள் இருந்த விஸ்வநாதரை, அப்போதிருந்த பண்டிதர்களும், பக்தர்களும் காப்பாற்றும் பொருட்டு அங்கிருந்த கிணற்றில் வைத்துள்ளர்கள். தற்போதிருக்கும் விஸ்வநாத ஸ்வாமி இந்த்ரபூரின் மகாராணியால் ஸ்தாபனம் செய்யப் பட்டதாகக் கூறினார்.
 
 
வெளியே வந்து, அன்னை விசாலாக்ஷி சந்நிதி நோக்கி புறப்பட்டேன். தமிழ் கோயிலில் குடி கொண்டிருக்கிறாள். ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களால் பூஜை செய்யப் பட்ட அம்பிகை ன்னு சொன்னார். கொஞ்ச நேரம் (ஐந்து நிமிடம்) ஓய்வு எடுத்துக் கொண்டு,ஆட்டோவில் நேராக பனாரஸ் ஹிந்து விஸ்வவித்யாலை க்குச் சென்றேன்  (BHU) . ரொம்ப பெரிய பரப்பளவில் இருந்தது BHU.அங்கிருந்த விஸ்வநாதர் கோயிலும் ரொம்ப ப்ரம்மாண்டமாவே இருந்தது. பிர்லா மந்திர் . கோயிலின் முன்பு founder of BHU பண்டித் மாளவியரின் உருவச் சிலையை நிறுவி இருக்கிறார்கள். ஸ்ரீ ஆதி சக்தி துர்கா பரமேஸ்வரி, சங்கட் மோச்சன்" , ஆஞ்சநேய ஸ்வாமி மற்றும் சீதா பிராட்டி, இளையாழ்வார்  பர்ஹு விட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.காசி பயணம் காலபைரவர் பார்காமல் முடியாது என்று எங்கோ படித்தால் நியாபகம்.ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளூர்வாசிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நல்ல பெரிய மீசையுடன், பெரிய திருமுக மண்டலத்துடன் அருள்பாலித்தார் ஸ்ரீ கால பைரவர். காசியில் உள்ள மற்ற சந்நிதிகளில் இருக்கும் பண்டிதர்கள் எமாற்றுவதுபோல் இங்கு இருப்பவர்கள் செய்வதில்லை என்று ஆட்டோ ஓட்டுனர் கூறினார். பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று ஸ்ரீ கால பைரவரின் அருகே சென்று அவரைத் தழுவி வழிபட்டனர்.
 
பின்னர் ஆட்டோவில் ரூமுக்கு விரைந்து . அங்கிருந்து ரயில் நிலையம் வந்து, ஆட்டோ ஓட்டுனருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவுத்துக் கொண்டு விடை பெற்றேன் . இறங்கு பொழுது அவர் பெயர் கேட்டேன் சோட்டு செட் என்றார். அவரின் கை பேசி எண்  +91-9889834524 . இனிமேல் இந்த கட்டுரை படிக்கும் எந்த நபர்கள் காசி சென்றால் அவரை தொடர்பு கொண்டு பேசினால் அவர் தங்களை ரயில் வண்டிக்கே வந்து கூப்பிட்டு சென்று உங்களுக்கு வேண்டிய உதவியை செய்வார்.கான்பூர் ராஜா என்று மறக்காமல் சொல்லுங்கள் இரவு இரண்டரை மணியளவில் கான்பூர் வந்தேன் . நான் இங்கு வந்ததுக்கு அப்புறம் அவர் போன் பண்ணி பத்திரமாக வந்து சேர்ந்தன என்பதை விசாரித்து கொண்டார்.. 



படிக்க மேலே உள்ள சுட்டியை தொடருங்கள்

No comments:

Post a Comment