மனித உடலில் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றும்
மிக முக்கியமான வேலையைச் செய்வது சிறுநீரகம். அமெரிக்காவில்
ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகத்தைச் செயற்கை முறையில் வளர்த்து, எலிக்குப்
பொருத்த உள்ளனர். இச்சிறுநீரகங்களில் ஒருசில குறைபாடுகள் இருந்த போதிலும்,
இம்முறை மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
வீணாப் போன சிறுநீரகத்தை வெளியே எடுத்து, அதில் உள்ள கெட்ட திசுக்களை
வெட்டி எடுத்து, அம்மனிதனின் உடலிலிருந்தே நல்ல திசுக்களை எடுத்து,
அச்சிறுநீரகத்தில் பொருத்தி ஆய்வுக்கூடத்தில் அதை வளர வைத்து மீண்டும்
உடலில்
பொருத்தி விடுவார்கள். இதனால் இரண்டு முக்கிய நன்மைகள் இருக்கின்றன. அந்த
மனிதனின் திசுக்களையே வைத்து வளர்ப்பதால் உடலில் கச்சிதமாகப்
பொருந்திவிடும். மற்றொன்று, சுமாரான சிறுநீரகங்களைத் தூக்கி எறியத்
தேவையில்லை.
அமெரிக்காவில் மட்டும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக லட்சோபலட்சம்
பேர் க்யூ வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு
வரப்பிரசாதமாக அமையும். நல்ல முறையில் ஆய்வு முடிந்துவிட்டால் இது மருத்துவ
உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment