வெளிநாடுகளுக்குப் பயணம் போகிற பலர் டிராவல் இன்ஷூரன்ஸ்
எடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். போன இடத்தில் பணம் பறிபோய்
அவதிபடுகிறவர்கள் உண்டு. திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்
கஷ்டப்படுகிறவர்களும் உண்டு. இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க என்ன
செய்யவேண்டும்?
''வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயம் டிராவல்
இன்ஷூரன்ஸ் தேவை. ஏனெனில், வெளிநாடுகளில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த
மருத்துவமனையிலும் மருத்துவம் செய்துகொள்ள முடியாது. தவிர, அங்கு
மருத்துவக் கட்டணம் அதிகம். மேலும், விமானப் பயணத்தின்போது ஏற்படும்
இடர்பாடுகளிலிருந்தும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள இந்த இன்ஷூரன்ஸ்
உதவுகிறது.
டிராவல் இன்ஷூரன்ஸ் குறைந்தபட்சம் 7 நாள் முதல் 180
நாட்கள் வரை தரப்படுகிறது. 6 மாத குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை இந்த
இன்ஷூரன்ஸை எடுக்கலாம். மேலும், இந்த பாலிசியை நீங்கள் சுற்றுலாவிற்கு
கிளம்பும் தினத்தன்றுகூட எடுக்கலாம். நீங்கள் விமானத்தில் ஏறி
வெளிநாட்டிற்கு சென்று திரும்பி இந்திய விமான நிலையத்துக்குள் இறங்கும் வரை
கவரேஜ் கிடைக்கும்.
பொதுக் காப்பீடு நிறுவனங்கள் டிராவல் இன்ஷூரன்ஸ்
பாலிசியை விநியோகம் செய்கின்றன. இதற்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம் தேவை
என்று சொல்கின்றன சில பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். ஆனால்,
தனியார் நிறுவனங்கள் இதை வலியுறுத்துவதில்லை.
இந்த இன்ஷூரன்ஸில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு இழப்பீடு
கிடையாது. ஆனால், மிகவும் சிக்கலான அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில்
மிகக் குறைந்த அளவு இழப்பீடு மட்டுமே கிடைக்கும்.
சுற்றுலாச் செல்லத் திட்டமிட்ட பிறகு, நெருங்கிய
உறவினர் இறந்து, அதனால் பயணம் ரத்தானால், டிக்கெட் மற்றும் ரூமை கேன்சல்
செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பை க்ளைம் செய்ய முடியும். ஆனால், சுற்றுலாச்
சென்றபிறகு பாதியில் திரும்பினால் எந்த இழப்பீடும் கிடைக்காது.
சுற்றுலாவின்போது உங்களின் பொருட்கள், பர்ஸ் தொலைந்தால்
உங்களின் அவசரத் தேவைக்காக சிறிதளவு பணமும் இழப்பீடாக கிடைக்கும்.
வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் தவறுதலாக ஒரு பொருளை
உடைத்துவிட்டால் அதற்கும் க்ளைம் கிடைக்கும்.
சில மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதி இருக்காது. அப்போது
பணத்தைச் செலவழித்து மருந்து வாங்கி, அதற்கான பில்லை இந்தியா வந்தபிறகு
இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்து க்ளைம் செய்துகொள்ளலாம். க்ளைம்
தொகைக்கான ஆவணங்கள் கொடுத்த ஒரு மாதத்தில் க்ளைம் உங்களின் வங்கிக்
கணக்கில் வந்துவிடும்.
வெளிநாட்டுச் சுற்றுலாவின் போது உங்களுக்கு ஏதாவது
அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இலவச தொலைபேசி
எண்ணில் தொடர்புகொண்டு உங்களின் கோரிக்கையை பதிவு செய்தால் மட்டுமே
இழப்பீடு பெறமுடியும்.
மேலும், சுற்றுலாச் செல்லும்போது உங்கள் இன்ஷூரன்ஸ்
பாலிசி எண், அந்நிறுவனத்தின் பெயர், பாலிசியின் பெயர், நிறுவனத்தின் இலவச
தொலைபேசி எண் ஆகியவை உங்களின் நினைவில் அல்லது ஏதாவது ஓர் இடத்தில் பதிவு
செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை பாலிசியின் நகல் தொலைந்துவிட்டால்கூட
பாலிசியின் எண்ணை வைத்து சிகிச்சை உள்ளிட்டவைகளைப் பெறமுடியும்.
இந்த இன்ஷூரன்ஸுக்கு பிரீமியம் என்பது ஒரு நபருக்கு 7
நாட்களுக்கு, 50 ஆயிரம் டாலர் கவரேஜுக்கு சுமார் 900 ரூபாய்தான். க்ளைம்
தொகை என்பது டாலரில்தான் இருக்கும். ஆனால், பிரீமியம் மட்டும் இந்திய
ரூபாயின் மதிப்பில் செலுத்தவேண்டும்
No comments:
Post a Comment