கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு
வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இதற்கு முன்பு 57.32 என்பதுதான் மிகக்
குறைந்த அளவாக இந்திய ரூபாய் இருந்தது. இந்தமுறை இந்த அளவையும் தாண்டி
58.98 என்கிற அளவுக்கு குறைந்துவிட்டது. என்ன காரணம், ஏன் இந்த அளவுக்கு
ரூபாய் மதிப்பு சரிந்தது?
பொதுவாக வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி குறைவாக
இருக்கும்போது, அங்கிருக்கும் பணம் வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும். ஆனால்,
இந்த நடைமுறைக்கு மாறாக, வளர்ந்த நாடுகள் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு
இருக்கிறது எனில் வளரும் நாடுகளில் போட்ட முதலீடு மொத்தத்தையும்
எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். இப்படி செய்வதினால் அவர்களுக்கு கரன்சி
ரிஸ்க் கிடையாது. மேலும், இப்போது அமெரிக்காவில் நீண்டகால பாண்டுகளுக்கே
அதிக வட்டி கிடைப்பதினால் அந்த முதலீட்டை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டிலே
முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால், கடந்த வாரத்தில் கடன் சந்தையில்
சில ஆயிரம் கோடி முதலீடு வெளியே சென்று டாலருக்கான தேவையை
அதிகப்படுத்தியது.
ஸ்பாட் மார்க்கெட்டில் 58.98 ரூபாய் வரைக்கும் கடந்த
வாரத்தில் ரூபாய் சரிந்தது. அதன்பிறகு ரூபாய் உயர ஆரம்பித்து. ரூபாயின்
சரிவுக்காக காத்திருந்த ஏற்றுமதியாளர்கள், இந்த நிலையில் வந்தவுடன் டாலரை
விற்க ஆரம்பித்தார்கள். தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால்,
வெளிநாட்டில் பதுக்கி இருக்கும் பணம் இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டது
என்றும் கரன்சி சந்தையில் பேச்சு பரவியது.
// ''இந்தியாவுக்கு இன்னும் நிறைய அந்நிய முதலீடு வரும் என்று அர்விந்த்
மாயாராம் சொன்னது, அந்நிய நேரடி முதலீட்டில் வரம்பு தளர்த்தப்படும் என்று
நிதி அமைச்சர் சிதம்பரம் சொன்னது போன்ற காரணங்களால், வேகமாக சரிந்த ரூபாய்
இப்போது மீண்டுவர ஆரம்பித்திருக்கிறது.//
//மேலும், ரேட்டிங் ஏஜென்சி யான ஃபிட்ச் இந்தியாவுக் கான அவுட்லுக்கினை
உயர்த்தி யிருக்கிறது. இதனால் நம் நாட்டின் மீதான நம்பிக்கையை
அதிகரித்திருக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது.//\
//
No comments:
Post a Comment