Search This Blog

Monday, March 05, 2012

இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கறீங்களா?


சிலிண்டர் இனி வருடத்துக்கு நான்குதான் கிடைக்குமாம்; அதிகம் தேவைப்பட்டால் இரு மடங்கு ரூபாய் கொடுத்து பெற வேண்டியிருக்கும்; ஆறு லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்கள், இரண்டு மடங்கு பணம் செலுத்தி பெற வேண்டும் என்று நாளொரு செய்தியும், பொழுதொரு வதந்தியுமாய் வெளிவருகிறது. இந்நிலையில் இன்டக்ஷன் அடுப்பை தற்சமயம் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இன்டக்ஷன் வாங்கி வந்தவுடனேயே கடைகளில் சொல்லிக் கொடுத்த இரண்டொரு அறிவுரைகளுடன் அதனைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றோம். ஆனால் அந்த அடுப்புடன் கொடுக்கப்பட்டுள்ள ‘உபயோகிக்கும் முறை’ என்ற தகவலைத் தெளிவாகப் படித்துப் புரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் பராமரிக்க எளிதாக இருக்கும். இதோ மேலும் சில குறிப்புகள்:

* முறையான மின்இணைப்பு கொடுக்க வேண்டும்.

* அடுப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து மிக்ஸி, கியாஸ் அடுப்பு என்று இரண்டு பக்கமும் நெரிசலாக வைத்துக் கொள்ளாமல், சற்றே இடவசதியோடு இருக்க வேண்டும்.

* அடுப்பை ‘ஆன்’ செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் ஒளிரும். (உ.ம்.) 1800 என்று. அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. பால், தண்ணீர், சூப், அரிசி என்று என்ன சமைக்கப் போகிறோமோ அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும்.

* பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்து விட்டால் உடனே தண்ணீர் கொண்டு கழுவி விடாதீர்கள். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விடுங்கள். 

* குக்கருக்கான ‘காஸ் கட்’டை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும். ‘காஸ்கட்’ பழசாகி விட்டால், விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்தத் தண்ணீர் அடுப்பினுள் சென்று, உள்ளே இருக்கும் எலெக்டிரிக் ‘காயில்’ பழுதாக வாய்ப்புள்ளது.

* சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டு கழுவக் கூடாது. ஸ்க்ரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் இலேசாகத் தேய்த்தால் சுத்தமாகிவிடும் . பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்துவிட்டு, மீண்டும் அலசி விட்டு திரும்பவும் துடைத்து விட்டால் ‘பளிச்’!

* அடுப்பின் கீழ்ப்புறம் காற்றாடி (Fan) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத்பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும்.

* அடுப்பின் உபயோகம் முடிந்தபின் உடனடியாக மெயின் ஸ்விட்ச்சை அணைக்கக் கூடாது. (அடுப்பில் உள்ள ஸ்விட்சை அணைத்து விட்ட போதும் கீழே உள்ள காற்றாடி (Off position) சுற்றிக் கொண்டிருக்கும். காயில் ‘சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்றபின், அடுப்பிலிருந்து வரும் சப்தமும் (விஷ்) நின்றுவிடும். அதன் பிறகே மெயின் ஸ்விட்ச்சை அணைக்க வேண்டும்.

* அடுப்பு உபயோகம் முடிந்தபின் அதன் மேல் தேவையில்லாமல் பாத்திரங்களை வைக்கக் கூடாது.  

மீனாக்ஷி ரகுபதி,சென்னை

1 comment:

  1. காஸ் குக்கரை விட இன்டக்சன் குக்கர் பாவிப்பது லாபமா? செலவு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ReplyDelete