Search This Blog

Thursday, March 08, 2012

விளையாட்டு துறையில் பெண்கள்


74.76 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை புரிந்தவர் (1983) லிலக் என்ற பின்லாந்து நாட்டு வீராங்கனை.

1994-ல் அர்ஜுனா விருது பெற்ற இந்திய தடகள வீராங்கனை கே.ஸி.ரோசாக்குட்டி.

1993-ல் அர்ஜுனா விருது பெற்ற இந்திய தடகள வீராங்கனை கே.ஸாரம்மா.
ஸ்டெஃபி கிராப் தனது ஏழாவது விம்பிள்டன் டென்னிஸ் தனி நபர் மகளிர் பிரிவு பட்டத்தை தனது 27-வது வயதில், 1995-ல் பெற்றார்.

1988-ல் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் நீச்சல் போட்டியில் 26 கி.மீ. தூரத்தை 9 மணி 5 நிமிடத்தில் நீந்திக் கடந்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார் இந்திய நீச்சல் வீராங்கனை அர்ச்சனா பாரத்குமார் பட்டேல். இவர் தனது 13-வது வயதில் இச்சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ் பெற்ற இந்திய வீராங்கனை பி.டி.உஷா 1983-ல் அர்ஜுனா விருதும் 1985-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். 

இந்திய வீராங்கனை எம்.டி.வலசம்மா 1983-ல் பத்மஸ்ரீ விருதும், 1982-ல் அர்ஜுனா விருதும் பெற்றார்.

1996 ஒலிம்பிக்கில் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார் சீன நாட்டு வீராங்கனை வா ஜ ஸியா.

1996 ஒலிம்பிக்கில் 10,000 மீட்டர் பெண்கள் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார் பெர்னாண்டோ ரிரைரோ என்ற வீராங்கனை.

20 விம்பிள்டன் போட்டிகளில் வென்றவர் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை பில்லிஜீன்.

டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ் 5.12.1973 அன்று பிறந்தார்.

ஒலிம்பிக்கின் முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுபவர் பேனி டுரக் என்ற ஆஸ்திரேலிய நாட்டு வீராங்கனை.

இவர் 1912-ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார்.

932-ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களை நீச்சல் பிரிவில் பெற்றார் ஹெலர் மாடிஸன் என்ற அமெரிக்க வீராங்கனை. இவர் 1913-ல் வாஷிங்டனில் பிறந்தார்.

1936 ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை நீச்சல் பிரிவில் பெற்றார் ஹென்ட்ரிக்கா மாஸ்டன் பரோஜ் என்ற டச்சு நாட்டு நீச்சல் வீராங்கனை. இவர் 26.2.1919 அன்று நாஸ்டர்டாமில் பிறந்தார்.

ஐந்து முறை ஆங்கிலக்கால் வாயை நீந்திக் கடந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் கிரேட்டா ஆண்டர்சன் என்ற டேனிஸ் நாட்டு நீச்சல் வீராங்கனை. 1928ல் டென்மார்க்கில் பிறந்த இவர், 1948 ஒலிம்பிக்கில் இரு தங்கப்பதக்கங்களை நீச்சல் பிரிவில் பெற்றார்.

பதினாறாவது வயதில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு (1952) நீச்சல் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றார் ஹங்கேரி நாட்டு நீச்சல் வீராங்கனை கேத்தலின் ஸோகெ.

1956, 1960, 1964 ஒலிம் பிக்குகளில் நீச்சல் பிரிவில் தொடர்ந்து தங்கப்பதக்கங்களை வென்றதோடு மட்டுமின்றி 39 உலக சாதனை வெற்றிகளைப் பெற்றவர் ஆஸ்திரேலிய நாட்டு நீச்சல் வீராங்கனை டான் பிரேஸர்.

- அ.சித்ரா அனந்தகுமார், கன்னியாகுமரி


No comments:

Post a Comment