இந்த வார எச்சரிக்கை:
மணல் அல்ல வாழ்க்கை அது.இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக தில்லியில் இப்போது குரல் கொடுக்காத
தமிழகக் கட்சியே இல்லை. இந்த ஒற்றுமை ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும்,
இன்னொரு பக்கம் இதே பிரதான கட்சிகள் இன்னொரு பிரச்னையில் கூட்டாக மௌனம்
காட்டுவது கவலை தருகிறது.
தமிழ் நாட்டில் தமிழ் மண்ணை விற்று காசாக்குவதற்காக தமிழரை, தமிழரே கொல்லும் கொடூரத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட்
கட்சித் தலைவர் நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு பிரதான அரசியல்வாதியும் வாய் திறப்பதில்லை.திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே நம்பியாற்றில்
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை உள்ளூர் பொதுமக்கள்
தடுத்தார்கள். லாரி அவர்கள் மீதே ஏற்றப்பட்டுத் தப்பிச் சென்றிருக்கிறது.
இதில் சதீஷ் குமார்
என்ற இளைஞர் லாரியில் நசுங்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்.மணல் கொள்ளையைத் தடுக்க வருபவர்களை அவர்கள் பொதுமக்களானாலும்,
அதிகாரிகளானாலும் தாக்குவது, கொல்வது என்பது தமிழ்நாட்டில் இது
முதல்முறையல்ல.
கடந்த மூன்றாண்டுகளில் எட்டு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. கோவை
கவுண்டம்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் மணல் எடுத்ததைத் தடுத்த கிராம
அதிகாரி. 2009 மார்ச்
15 அன்று தாக்கப்பட்டார். மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் பொதுப்பணித்துறை
ஊழியர் பாலகிருஷ்ணனை மூவர் 2010 டிசம்பர் 3 அன்று தாக்கினார்கள்.
திண்டுக்கல்
வேடந்தூரில் வெட்டியப்பட்டி கிராமத்தில் மணல் திருடி ஏற்றிச் சென்ற தி.மு.க
பிரமுகரின் லாரியை 2011 ஜனவரி 14 அன்று மக்கள் பிடித்து அதிகாரிகளிடம்
ஒப்படைத்தனர்.
அதே வருடம் மே 2 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றில் மணல் திருடிய
லாரியைத் தடுத்த வருவாய் துறை ஆய்வாளர் சங்கரை லாரி டிரைவர் தாக்கினார். மே
12 அன்று நெல்லை செய்திங்கநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிராம
அதிகாரி பால கிருஷ்ணன் தாக்கப்பட்டார். ஜூன் 8 அன்று வேலூர் காட்பாடியில்
தாசில்தார்
மனோகரன் தாக்கப்பட்டார். ஜூலை 7 அன்று கடலாடியில் மலட்டாற்றுக் கரையில்
மணல் திருடிய டிராக்டரை வழிமறித்த வருவாய் ஆய்வாளர் மாரியும் சுரங்க துணை
இயக்குனர் சொக்கலிங்கமும் தாக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில் குமரி
மாவட்டத்தில் விளனவங்கோடு அருகே செக்போஸ்ட்டில் வண்டியைத் தடுத்த காவல்
அதிகாரி
மனோகரன் தாக்கப்பட்டார்.மணல் கொள்ளையைத் தடுக்க வருபவர்களை அவர்கள் பொதுமக்களானாலும்,

மனோகரன் தாக்கப்பட்டார்.
தி.மு.க ஆட்சியிலும் சரி, அ.தி. மு.க.ஆட்சியிலும் சரி மணல்
திருட்டிலிருந்து வரும் வசூலைக் கட்சி மேலிடங்களுக்கு அனுப்பி வைக்கும்
பொறுப்பு கரூர் பகுதியைச்
சேர்ந்த பிரமுகர்களிடமே மாறி மாறி ஒப்படைக்கப்படுகிறது என்பது
பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நிருபர்களுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பெரும் பணம் சம்பந்தப் பட்டிருக்கிறது. ஒரு லாரியில் ஏற்றப் படும்
ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்குத் தரப்படும் தொகை வெறும்
ரூ300தான். வெளியில் விற்கும் விலை ஆயிரத்து இருநூறு. தமிழ்நாடு முழுவதும்
இந்த உபரி 900ல் பாதி அவ்வப்போதைய ஆளுங்கட்சிப் பிரமுகர்
தொடர்பானவர்களுக்கு
கணக்கிடப்பட்டு அனுப்பப்படுகிறது என்பதும் அதைக் கவனிக்கும் பொறுப்புதான்
கரூர் பிரமுகர்களுடையது என்பதும் அரசியல் வட்டாரங்களிலும் எல்லாருக்கும்
தெரியும். இந்த பிரம்மாண்டமான மணல் கொள்ளையில் கோடிக்கணக்கில் பணம் புழங்குகிறது.
தமிழக ஆறுகள் சூறையாடப் பட்டு சூழல் முற்றிலும் பாழாகி வருகிறது. தடுக்கச்
செல்லும்
கடமையுணர்வுள்ள அதிகாரிகளும், மக்களும் தங்கள் மண்ணைக் காப்பாற்ற
முற்பட்டதற்காகக் கொல்லப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். சுரங்க
மாஃபியாவால் அண்மையில்
மத்தியப்பிர தேசத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரி கொல்லப் பட்டதை பரவலாக இந்தியா
முழுவதும்
சித்திரித்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளைக,
கொலைகளைக் கவனிப்பதே இல்லை.தமிழ்நாட்டிலிருந்து மணல் திருடப்பட்டு கேரளாவுக்கும் இதர மாநிலங்களுக்கும்
மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியேயும் அனுப் பப்படுகிறது. மலேசியா,
சிங்கப்பூர்,
மாலத்தீவுக்கெல்லாம் நாம் ஏன் மணல் ஏற்றுமதி செய்வது அனு மதிக்கப்பட
வேண்டும் என்று புரிய வில்லை. மாலத்தீவுக்கு மட்டும்
சென்ற வருடம் 12 லட்சம் டன் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டி ருக்கிறது.நீதிமன்றம் தடை செய்தபிறகும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது.
அரசிடம் நிர்வா கத்திடம் நீதி கிடைக்காமல்தான் ஒருவர்
நீதிமன்றத்திடம் போக வேண்டியிருக்கிறது. அங்கே போட்ட உத்தரவையும் அரசும்
அரசியல் கட்சிகளும் மதிக்கப்போவதில்லை என்றால் ஒருவர் அடுத்து எங்கே செல்ல
முடியும்?
திரண்டு வந்து போராடும் மக்கள் மீதே வண்டியை ஏற்றிக் கொல்லும் துணிச்சல்
மணல் திருடர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அவர்கள் அரசியல் கட்சிகளின்
கூட்டாளிகளாக
இருப்பதால்தான்.கூடங்குளத்தில் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்த அவர்களுக்கு தொண்டு
நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணம் வருவதாக அவதூறு செய்யும் அரசியல் வாதிகள்
யாரும்
தங்கள் கட்சிக் கணக்குகளைக் காட்டுவதே இல்லை. ஒரு பஞ்சாயத்து உறுப்பினர்
கூட குவாலிஸ் காரிலும் எம்.எல்.ஏ. ஆடி காரிலும் பவனி வருவதற் கான பணம்
எங்கிருந்து
வருகிறது என்று ஆராயவேண்டும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையிலிருந்து
மட்டும் இதுவரை வந்திருக்கும் பணம் யார் யாருக்கு எவ்வளவு போயிருக்கிறது
என்பதை கரூர்
பிரமுகர்களை சி.பி.ஐ. விசாரணைக் குட்படுத்தினால் அம்பலமாகிவிடும்.
தமிழகத்தில் நடக்கும் மணல் கொள் ளையும் இன அழிப்பு வேலைதான். தன் இனத்தை,
தானே அழிக்கும் வேலை. மணல் இல்லாவிட்டால் ஆற்றில் நீர் இல்லை. நீர்
இல்லாவிட்டால் இந்தச் சமூகமே பாலையாகி அழியும் என்பதே வரலாறு. உலகின் மிகப்
பெரிய நாகரிகங்கள் நீர் இல் லாமல்தான் அழிந்தன.இப்போதைய மணல் கொள்ளை இன்னும் இருபதாண்டுகள் நீடித்தால் கூட, தமிழகம்
பாலையாகி அழியத் தொடங்கும். இதைக் கண்டிக்கவும் ஐ.நா சபையில் அமெரிக்கா
தீர்மானம் கொண்டு வரும்வரை காத்திருக்கப்போகிறோமா?
இந்த வார சர்ச்சை:
அமெரிக்கத் தீர்மானம் உதவுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா
இலங்கை நிலை பற்றிக் கொண்டு வந்திருக் கும் தீர்மானம் குறித்த விவாதம்
உலகெங்கும்
சூடு பறக்கிறது. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டுமென்று
தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிகளும் (முதன்முறையாக ? ) ஒருமித்த
ஆவேசக் குரலில்
நாடாளுமன்றத்தில் வற்புறுத்து கிறார்கள்.
இந்தப் பிரச்னையில் எனக்குத் தோன்றும் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைப் பற்றிப் பேசும் தகுதி இல்லாத நாடு
அமெரிக்கா. உலகெங்கும் போர்க் குற்றங் களைக் கூசாமல் செய்துவந்திருக்கும்
நாடு அமெரிக்கா.
இப்போதும் அதன் அசல் அக்கறை ஈழத்தமிழர்கள் மீது அல்ல என்பதே என் கருத்து.
தெற்காசியாவில் சீனாவுக்கு எதிரான காய் நகர்த்தலில் இலங்கை அரசியலை அது
பயன்படுத்துகிறது. அமெரிக்காவை அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் வேண்டுமானால்
நம்பிக் கொள்ளலாம். ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் நம்புவதில் ஒரு பயனும்
அவர்களுக்கு
இல்லை.
2. தில்லியில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் தமிழக அரசியல்வாதிகள்
நம்பத் தகுந்தவர்களே அல்ல. போர் நடந்து கொண்டிருந்தபோது இதே ஒற்றுமையை இதே
ஆவேசத்தை அவர்கள் தில்லியில் காட்டவில்லை. காட்டியிருந்தால் போரை நிறுத்தி,
பேச்சு வார்த்தைக்கு நகர்த்த பாடுபட்டிருந்தால், ஆயிரக்கணக்கான
உயிரிழப்புகளும், பொருட்
சேதமும் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். அப்போதும் முதலமைச்சராக இருந்த
கருணாநிதி தம் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியிருந்தாலே தில்லி
கேட்டிருக்கும்.
இப்போது பல்லில்லாத தண்ணிப் பாம்பாக அவர் இருக்கும் நிலையில் அவர்
மிரட்டல் களுக்கு அர்த்தமே இல்லை.
3. ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு தில்லியில் காங்கிரஸ் ஆட்சியைக்
கவிழ்த்து இடைத்தேர்தல் வரவழைக்க பி.ஜே.பி அயராமல் செய்துவரும் முயற்சியின்
ஒரு
பகுதியாகவே இப்போதைய சலசலப்பும் தெரிகிறது.
4. காங்கிரசும் இந்திய அரசும் இலங்கை அரசைக் கண்டிக்காமல் அரசியல் செய்தால்
தான் அங்கே சீனாவின் செல்வாக்கை சமன்படுத்த முடியும் என்று உறுதியாக
நம்புகின்றன.
இந்த அணுகுமுறையில் உடனடியாக எந்த மாற்றமும் வரப் போவதாகத் தெரியவில்லை.
தமிழகக் காங்கிரஸ் எம்.பிகள் தமிழ்நாட்டு உணர்ச்சிகளை சமாளிக்க வளைத்து
வளைத்துப்
பேசும் உத்தியைப் பின்பற்றுகிறார்களே தவிர, அவர்கள் கையில் எந்த பலமும்
இருப்பதாகத் தெரியவில்லை.
5. அமெரிக்காவின் தீர்மானமே ஒரு சரியான தீர்மானம் அல்ல என்று விமர்சகர்
அ.மார்க்சும், அதைவிட அழுத்தமாகக் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் தியாகுவும்
முன்
வைக்கும் கருத்துகளே எனக்குச் சரியென்று தோன்றுகிறது.“ஐ.நா தீர்மானத்தை
தி.மு.க., அ.தி.மு.க., ஆதரிப்பதனால் அது தமிழர் களுக்கு நல்ல தீர்மானமாகி
விடாது.
காங்கிரஸ் எதிர்ப்பதனால் அது இலங்கைக்கு எதிரான தீர்மானமாகி விடாது.
இந்தத் தீர் மானத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பொறுத்துதான் இந்தத்
தீர்மானத்தின் சாதக
பாதகம் அலசப்பட வேண்டும். இந்தியா, இலங்கை , அமெரிக்கா ஆகிய மூன்று
நாடுகளும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியாகவே இந்தத் தீர்மானத்தை“தான்
பார்ப்ப தாக தியாகு
ஒரு நேர்காணலில் விரிவாகவே தெரிவித் திருக்கிறார். போர்க்குற்றங்கள்
பற்றிய சுயேச்சையான சர்வ தேசக் குழு விசார ணையை வரவிடாமல் தடுக்கவே இந்தத்
தீர்மானம்
பயன்படும் என்ற தியாகுவின் கருத்து சரியென்றே எனக்கும் படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் எப்போதும் போல உணர்ச்சிவசப்படுவது
தீர்வுகளைத் தராது. அறிவுபூர்வமாக அலசி காய்களை நகர்த்தித் தீர்வுகளைத்
தேடுவதே சரியான
வழி என்ற என் கருத்து மறுபடியும் உறுதியாகிறது.
இந்த வார வருத்தம்/மகிழ்ச்சி:
அரவாணி வாரியத்தின் உறக்கம்
தி.மு.க ஆட்சியில் அரவாணிகள் என்ப்படும் மூன்றாம் பாலினருக்கான நல வாரியம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அரவாணிகளுக்கு கல்வியறிவும் வேலை வாய்ப்பும் பெருக உதவிகள் செய்து அதன் வழியே அவர்கள் வறுமையிலிருந்தும் இழி தொழில்களிலிருந்தும் விடுதலை அடையச் செய்வதாகும். வாரியம் உதவும் என்று தொடர்ந்து வாக்குறுதிகளை அதிகாரிகள் தெரிவித்ததை நம்பி திருச்சியில் பிரியங்கா என்ற அரவாணி செவிலியருக்கான ஓராண்டு படிப்பில் சேர்ந்தார். அவரது கல்விக்கட்டணத்தை வாரியம் தரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆட்சி மாற்றத்தில் வாரியம் முடங்கியது. தேர்வு நெருங்கியும் கல்விக் கட்டணம் கட்டாததால், பிரியங்காவை தேர்வு எழுத அனுமதிக்க செவிலியர் கல்வி நிலையம் மறுத்தது. கடைசி நொடியில் லயன் சங்க ஆளுநர் ராமராஜனிடம் பிரியங்காவின் பிரச்னை தெரிவிக்கப் பட்டதும், லயன் சங்கம் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிரியங்கா தேர்வு எழுத உதவியிருக்கிறது. அரவாணிகள் நல வாரியம் போல, பல நல வாரியங்கள் ஆட்சி மாற்றத்தில் முடங்கியிருப்பது வருத்தமாகவும் கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது. லயன் சங்கம் உதவியது மகிழ்ச்சியென்றாலும், ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட தீர்வுகளை ஒருவர் நம்பியிருக்க முடியாது. எனவே வாரியங்கள் செயல்பட வேண்டும்.

No comments:
Post a Comment