Search This Blog

Friday, March 16, 2012

தொலைக்காட்சி - ஒரு பார்வை


டிவி என்று சுருக்கமாகச் சொல்லப்படற டெலிவிஷனோட தமிழ்ப் பெயர், ‘தொலைக்காட்சி’, எங்கேயோ தொலைவில் நடக்கிற விஷயங்களை, நம்மிடம் கொண்டுவந்து காட்டுவதால் அதுக்கு இப்படி ஓர் அழகான பெயர்!டெலிவிஷனில் பலவிதங்கள் உண்டு, பெரும்பாலான டிவி பெட்டிகள் கொஞ்சம் பெரிய சைஸ் சோப்பு டப்பா மாதிரி மேஜை மேல் உட்கார்ந்திருக்கும். ஆனால் இப்போ லேட்டஸ்டாக வந்திருக்கிற எல்.சி.டி, எல்.ஈ.டி, ப்ளாஸ்மா டிவியெல்லாம் ரொம்ப ஸ்லிம், ரொம்ப ஸ்மார்ட். அதை வைப்பதற்குத் தனியாக மேஜையெல்லாம் தேவையில்லை, சுவற்றில் ஆணி அடித்து மாட்டிவிடலாம்!இப்படி டெலிவிஷன் பெட்டியின் வடிவம் நவீனமாக மாறினாலும், அதுக்குள்ளே படம் எப்படி வருகிறது என்ற தொழில்நுட்பம் ரொம்பப் பழசு. அதைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

முதலில் சோப் டப்பா டிவியை எடுத்துக்கொள்வோம். அதன் முன்பகுதியில் ஒரு செவ்வகத் திரை இருக்கிறது. அதுக்குக் கீழே சானல் மாற்றுவதற்கு, ஒலி அளவை அதிகரிப்பதற்கு, குறைப்பதற்கு எல்லாம் பொத்தான்கள் இருக்கின்றன.ஆச்சர்யமான விஷயம், டிவி திரை என்று நாம் சொல்வது, உண்மையில் ஒரு திரையே கிடையாது, அது ஒரு பெரிய குழாயின் முனை. ஆங்கிலத்தில் அதை ‘பிக்சர் ட்யூப்’ என்று சொல்வார்கள்.இப்போது, உங்கள் கையில் கோகுலம் இருக்கிறது. அதைச் சுருட்டி ஒரு குழாய் மாதிரி மாற்றிக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனையை உங்க ஃப்ரெண்ட் காதில் வையுங்கள். இன்னொரு முனையிலிருந்து நீங்கள் ’ஹலோ’ என்று சொல்லுங்கள். அது உங்கள் நண்பருக்குத் தெளிவாகக் கேட்கும், இல்லையா?ஆக, ஒரு முனையில் நீங்கள் பேசிய ‘ஒலி’, அந்தக் குழாய் வழியாகப் பயணம் செய்து, இன்னொரு முனையில் கேட்கிறது.

டிவிக்குள்ளேயும் இதே விஷயம்தான் நடக்கிறது. ஆனால் இங்கே வெறும் ‘ஒலி’, அதாவது சத்தம் மட்டுமில்லை, ‘ஒளி’, அதாவது வெளிச்சமும் சேர்ந்து பயணம் செய்கிறது.டெல்லியில் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, நீங்கள் உங்கள் ஊரில் இருந்தபடி அந்தப் போட்டியை டிவியில் பார்த்து ரசிக்கிறீர்கள். எப்படி?டெல்லியில் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, நீங்கள் உங்கள் ஊரில் இருந்தபடி அந்தப் போட்டியை டிவியில் பார்த்து ரசிக்கிறீர்கள். எப்படி?டிவி ஒளிபரப்புக்கும் ஒரு பெரிய ட்ரான்ஸ்மிட்டர் உண்டு. இது காட்சிகளையும் சத்தங்களையும் மின்காந்த அலைகளாக மாற்றுகிறது, காற்றில் பரப்பிவிடுகிறது. இந்த அலைகள் இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்கப் பயணம் செய்யும், அதுக்குச் செயற்கைக்கோள் (சாடிலைட்) தொழில்நுட்பம் பயன்படுகிறது.ஆக, காற்றில் பரவி வருகிற இந்த அலைகள் உங்கள் வீட்டுப் பக்கத்திலேயும் வரும், அதைப் பிடித்து உங்கள் டிவிக்குள்ளே கொண்டு வருவதற்கு நாம் ஒரு ரிஸீவரைப் பயன்படுத்துகிறோம். இதுதான் ‘ஆன்டெனா’. இதன் மூலமாக வீட்டுக்குள்ளே வருகிற இந்த மின்காந்த அலைகளை நீங்களும் நானும் பார்க்க முடியாது. அதை மறுபடி காட்சியாக, ஒலியாக மாற்ற வேண்டும்.இந்த வேலையைத்தான் உங்கள் வீட்டு டிவி பெட்டி செய்கிறது, இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்த டிவி பெட்டிக்குள்ளே இருக்கிற பிக்சர் ட்யூப்தான் மின்காந்த அலைகளைத் திரைமுழுக்க விரித்துக் காட்டுகிறது, பல வண்ணங்களைக் கொண்டு வருகிறது, அதுக்கு ஏற்றபடி ஒலிகளையும் எழுப்புகிறது.

கிரிக்கெட் போட்டி என்று இல்லை, நீங்கள் டிவியில் பார்க்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இப்படித்தான் எங்கிருந்தோ ஒளிபரப்பாகிறது, செயற்கைக்கோள் வழியாக உங்கள் வீட்டுக்கு வருகிறது, ஆன்டெனா வழியாக உங்கள் டிவி பெட்டிக்குள்ளே வருகிறது, பிக்சர் ட்யூப் வழியாகத் திரையில் தெரிகிறது, கேட்கிறது.எல்.சி.டி, எல்.ஈ.டி, பிளாஸ்மா மாதிரி லேட்டஸ்ட் டிவிகளில் பிக்சர் ட்யூபே கிடையாது. அதுக்குப் பதிலாக வேற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒலி, ஒளி தரம் பல மடங்கு மேம்படுகிறது, அதனால் தான் இந்த வகை டிவிகள் சூப்பர் ஹிட்!சமீபத்தில் ‘ஸ்மார்ட் டிவி’ என்று ஒரு புது விஷயம் வந்திருக்கிறது. இது வெறும் டெலிவிஷன் மட்டுமில்லை, ஒரு குட்டி கம்ப்யூட்டரும்கூட, இதன் மூலமாக நீங்கள் படம் பார்க்கிறதோடு மட்டுமில்லாமல் அதைப் பதிவும் செய்யலாம், அந்த நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்களை இன்டர்நெட்டில் தேடிப் படிக்கலாம், உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம், இப்படி இன்னும் ஏகப்பட்ட வசதிகள் உண்டு!

1. ரொம்ப டிவி பார்த்தால் கண் கெட்டு விடும் என்கிறார்களே, நிஜமா ? 

டிவிமட்டுமில்லை, எந்த விஷயத்தையும் ரொம்ப நேரம் தொடர்ந்து பார்த்துகிட்டே இருக்கறது தப்புதான். அப்பப்போ நம் கண்களுக்கு ஓய்வு தர வேண்டும், வேற விஷயங்களைப் பார்க்க வேண்டும், அப்புறம் மறுபடி டிவிக்குத் திரும்பி வரலாம். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்கிறவர்களுக்குக் கூட டாக்டர்கள் இதே அறிவுரையைத்தான் சொல்கிறார்கள். 

ஆனால், டிவி விஷயத்தில் இன்னோர் அபாயம், அதில் வருகிற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து பார்த்துப் பழகினால், நம் மூளை மந்தமாகிடும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதனால் சொந்தமாக எதையும் சிந்திக்கிற திறமையே குறைந்துவிடுமாம்.

அதுக்காக டிவியைத் தூக்கி எறிந்து விடவேண்டாம். அளவோடு பார்க்க வேண்டும், நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க வேண்டும்!


1 comment: