பள்ளிக் கல்வித் துறையில் தடாலடி மாற்றங்களுக்கு வழி வகுக்கும் அரசாணை எண்
143. இந்த ஆணையின்படி வரவிருக்கும் (2012-13) கல்வி ஆண்டிலிருந்து,
மாணவர்களின் தரத்தையும், திறனையும் மதிப்பிட ஒரு புதிய முறையை
அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. அந்தப் புதிய முறைக்குப் பெயர் தான்
‘தொடர்
முழுமைத் திறன் மதிப்பீடு’ (Continuous and Comprehensive Evaluation).
சுருக்கமாக சி.சி.இ. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்கள்
மனப்பாடம் செய்து நினைவாற்றல் முறையில் தேர்வுகளைச் சந்திக்கும் முறையை
மாற்றி, சிந்தித்து, அறிவாற்றலைத் தெளிவு செய்யும் விதத்தில் ஆசிரியர்களின்
பயிற்சி
முறை இருக்குமாம். இந்த மதிப்பீட்டில் மார்க்குகள் கிடையாது. ஏ.பி.சி.டி.
என்று கிரேட் முறைதான். புதிய மதீப்பீட்டு முறை அறிமுகத்துடன், பள்ளிகளில் முப்பருவக் கல்வி
முறையையும் (Tri semester) அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. இந்த இரண்டு
முறைகளும் வரும் கல்வியாண்டில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்புவரை
அறிமுகப்படுத்தப்படும்.
கல்வித் துறையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவருவது
வரவேற்கத்தக்கதே. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, பொது மக்களிடையே விவாதமாக்க வேண்டாமா?"
இது போன்ற மாற்றங்கள் ஒரு
முன்னேறிய சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டியவை ஆகும். இங்கு இன்னமும், ஏழை,
பணக்காரன், சாதி, மத வேறுபாடுகள், ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்ற
கண்ணோட்டங்கள் மாறாத நமது கிராமப்புறங்களில், இது போன்ற கல்வி மதிப்பீட்டு
முறையை அறிமுகப்படுத்தினால், பல்வேறு புகார்களுக்கு வழி வகுக்குமோ என்ற
ஒரு கருத்தும் இருக்கிறது. நமது கிராமப்புறப் பள்ளிகள் இரண்டே ஆசிரியர்களைக் கொண்டவைதான். அந்த
இரண்டு ஆசிரியர்களுக்கும் கல்வி போதிப்பது தவிர, தேர்தல் வேலை, சென்ஸஸ்
வேலை
என்று வேறு பல பணிகளையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்
ஆசிரியர், ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர் மற்றும் மாணவியை சி.சி.இ.படி மதிப்பிட
முடியுமா?
மேலும் அறிவியல் படிப்பில் சிந்தனைத் திறனை வளர்க்க ப்ராஜக்ட் செய்யச்
சொல்வார்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்தின் துணையோடுதான் ப்ராஜக்ட்
செய்கிறார்கள். அப்படிச் செய்யப்படும் மாடலைக் கூட சரியாக பார்க்காமல்
வகுப்பில்
ஓரத்தில் வைத்துவிட்டுப் போகும்படி சொல்லும் ஆசிரியர்கள்தான் நிறைய. இந்தப்
பயிற்சி ஒரு சடங்கு போல்தான் நடக்கிறது.மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றலை வளர்க்க வேண்டுமானால்
ஆசிரியர்களுக்கு ஒரு சிந்தனைத் தெளிவு வேண்டும். அதற்கான பயிற்சி
அவர்களுக்குக் கொடுக்கப்பட
வேண்டாமா? அதேபோல செமஸ்டர் சிஸ்டம் என்றால், அந்த செமஸ்டரோடு படித்தது
மறந்து போகும். இப்போதிருக்கும் முறையில் புரியாத பாடங்களைப் புரிந்து
கொள்ள
வருடம் முழுவதும் வாய்ப்பு உண்டு.
பின்லாந்தில் இது போன்ற மாற்றங்களை 1970ல் கொண்டு வந்தார்கள். 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முழுமை பெற்றிருக்கிறார்கள். இந்த
இடைப்பட்ட ஆண்டுகளில் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் கொடுத்து
வந்தார்கள்.
அங்கே பாடத்திட்டங்களைக்கூட வெவ்வேறு பகுதிகளின் தேவைக்கேற்றபடி
தீர்மானிக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் செயல்படும் இந்த சி.சி.இ. திட்டத்தை தேசியக்
கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. அதுபோல இரண்டு
வருடங்களுக்கு
முன் கொண்டு வந்த செமஸ்டர் திட்டத்தையும் தில்லி பல்கலைக் கழகம் மறு
ஆய்வு செய்கிறது. எனவே தமிழக அரசு புதிய மாற்றங்களை விவாதிக்க வேண்டும்.
பிரின்ஸ் கஜேந்திரன்.
பொதுப்பள்ளிகளுக்கான மாதிரி மேடை
என்ற அமைப்பின் பொதுச் செயலாளர்
வரும் கல்வியாண்டு தொடங்க நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில், மாற்றங்களை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி விட்டதா?
சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க,
ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான
புத்தகங்களும் சமச்சீர்
கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான
பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில்
உள்ள
நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி
கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து
வழிகாட்டி வருகிறார்.
எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க,
ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான
புத்தகங்களும் சமச்சீர்
கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான
பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில்
உள்ள
நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி
கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து
வழிகாட்டி வருகிறார்.
எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
தேவராஜன்
மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குனர் .
சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க,
ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான
புத்தகங்களும் சமச்சீர்
கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான
பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில்
உள்ள
நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி
கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து
வழிகாட்டி வருகிறார்.
எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
ரத்தின சபாபதி.
தமிழக கல்வி, ஆராய்ச்சி வளர்ச்சி
நிறுவனத்தின் ஆலோசகர் .
- ப்ரியன்
சி. சி. இ. மதிப்பீட்டு முறையினால் என்ன நன்மைகள் ஏற்படும்? உலகப் புகழ்பெற்ற கல்வியாளர் பத்மா ஸ்ரீநாத்துடன் பேசியதில் இருந்து:
கே: புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?
ப: ஒரு மாணவர் 12 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள் பள்ளியில் படிக்கிறார்.
இவ்வளவு வருடப் படிப்புக்குப் பின்னர் அவர் எவ்வளவு தூரம் படிப்புக்குத்
தகுதி
படைத்தவராக, வேலைபார்க்கும் தகுதி உள்ளவராக இருக்கிறார்?
பள்ளி மாணவர்களிடம் திறன் மேம்பாடு நடக்கவில்லை. ஏனென்றால், பள்ளிகளில்
கல்வி கற்றல் நடைபெறவில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் கோளாறு.
ஒரு மாணவர் ஒரு பாடத்தை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைப்
பரிசோதித்துப் பார்ப்பதில் கோளாறு.
பள்ளிக் கல்விதானே அஸ்திவாரம்? அதில் உள்ள குறைகள்தான் எல்லாப்
பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். இவற்றை சரிசெய்வது எப்படி?
அதற்காகத்தான் சி. சி. இ.
இது ஏதோ திடுதிடுப்பென வரவில்லை. உலக அளவில் ஏற்கெனவே அமலில் உள்ள
விஷயம்தான்.
கே: பரீட்சை நடத்தும் விதத்தை மாற்றிவிட்டால் எல்லாமே மாறிவிடுமா?
ப: இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது,
இப்போது உள்ள கல்விமுறை, குருட்டு மனப்பாடத்தை ஊக்குவிக்கிறது. உண்மையில்
கல்வி
கற்பது என்பதில் விஷயம் போய்ச்சேர வேண்டும். அதுதான் அறிவு வளர்ச்சிக்கு,
திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆசிரியர் ஏதோ பாடம் நடத்துகிறார், மாணவர்
கையைக்
கட்டிக்கொண்டு கவனிக்கிறார் என்பது அல்ல, விஷயம். ஆசிரியர், மாணவர்
இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற வேண்டும். மேலும், இரண்டு
பேருக்கும்
பயன் கிடைக்க வேண்டும்.
இரண்டாவது விஷயம் மதிப்பீட்டு முறை பற்றியது. மாணவனை மதிப்பீடு
செய்வது, அவரைப் பாஸாக்குவதற்கோ பெயிலாக்குவதற்கோ அல்ல. அவரது திறன்
எவ்வளவு தூரம்
வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக. மாணவரை மதிப்பீடு செய்வதன்
மூலம் ஆசிரியர் தன்னைத் தானே சுய மதிப்பீடு செய்து கொள்கிறார்.
மேலும், கற்றல் என்பது படிப்படியாக நடக்கிறது. ஒரே வீச்சில் நடந்து
முடிவது அல்ல. எனவே இந்த வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் அளவிட வேண்டியது
அவசியம்.
இதைத்தான் சி. சி. இ. யில் formative assessment என்று
குறிப்பிடுகிறார்கள்.
கே: சி. சி. இ. அறிமுகப்படுத்தப்பட்டால் கற்றல் மேம்படுமா?
ப: முழுக்க சரியாகுமா, ஆகாதா? ஐ’ம் ஸாரி. அப்படியெல்லாம் எனக்குச்
சொல்லத் தெரியல. கல்வியைப் பொறுத்தவரையில் சி. சி. இ. உலகம் ஏற்கும் ஒரு
பெஸ்ட் ப்ராக்டீஸ். அதை நாமளும் கடைப்பிடிக்க வேண்டியதுதானே!
கே: ஆசிரியர்கள் இதை எப்படி எடுத்துக்குவாங்க? பெற்றோர்களின் வரவேற்பு?
ப: ஆசிரியர்களுக்கு இது ஒரு சவால்தான், சந்தேகமே இல்ல. ஆனா,
சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ல இந்த மாற்றம் ஈஸியா நடந்ததே, அதே மாதிரியே ஸ்டேட்
பள்ளிகள்லயும்
நடக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு ஆசிரியர் தன்னோட பணியில எவ்வளவு திருப்தி அடைகிறார் என்பது ரொம்ப
முக்கியம். இன்னைக்கு நான் ஒரு உருப்படியான வேலை பண்ணினேன் அப்படீங்கற
திருப்தி
ஆசிரியர்களுக்கு ஏற்படறதுக்கு சி. சி. இ. உதவி பண்ணும். இதை அவங்களுக்கு
சரியா புரியவைக்கணும்.
பெற்றோர்கள் மத்தியில வரவேற்பு இருக்கும்னு நான் நம்பறேன். காரணம்,
இன்னைக்கு சமுதாயத்துல விழிப்புணர்வு இருக்கு, உலகத்துல ஏற்படக்கூடிய
மாற்றங்களுக்கு ஏற்ற
மாதிரி நாமளும் மாறியாகணும், போட்டியை எதிர்கொள்ளணும் அப்படீங்கற சிந்தனை
பரவலா வர ஆரம்பிச்சிருக்கு.
அதுமட்டுமல்ல. நீங்கள் எந்த அப்பா-அம்மாவைப் போய்க் கேட்டாலும் அவர்கள்
தற்போதைய கல்விமுறையின் குறைகளைப் பற்றி வருந்துகிறார்கள். தற்போதைய
முறையில் மாணவர்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் என்பது எல்லா பெற்றோர்களுக்கும்
தெரிந்திருக்கிறது. இது சிஸ்டத்தில் உள்ள குறைபாடு, இதை நம்மால் மாற்ற
முடியவில்லையே என்ற
ஆதங்கம் பெற்றோர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த சிஸ்டத்தை
சரிசெய்வதுதான் சி. சி. இ.
கே: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள். இத்தனை பேரையும் சி. சி. இ. க்கு ஏற்றவிதத்தில் தயார் செய்வது எப்படி?
ப: ஆசிரியர்களுக்குப் பயிற்சிதர வேண்டியது ரொம்ப அவசியம். நமது நாட்டில்
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்களுக்குப் பஞ்சமில்லை. ஐ.ஐ.எம். போன்ற
நிறுவனங்கள்
உதவ முடியும்.
ஒருதடவை பயிற்சி என்பதோடு நின்றுவிடாமல், professional development
என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சீனியர் ஆசிரியர்களை வழிகாட்டிகளாக
தயார்படுத்தலாம். ஒரு பள்ளிக்கு 5 பேர் இருந்தால்கூட போதும். இவர்கள் சக
ஆசிரியர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் ஏற்ற இணக்கமான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தித் தர
வேண்டும். தற்போது, கார்பரேட் நிறுவனங்கள் சமுதாயப் பொறுப்பு ஏற்க
முன்வருகின்றன.
இவர்களின் உதவியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பலன்
கிடைக்கும்.
பள்ளி மாணவர்களிடம் திறன் மேம்பாடு நடக்கவில்லை. ஏனென்றால், பள்ளிகளில் கல்வி கற்றல் நடைபெறவில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் கோளாறு. ஒரு மாணவர் ஒரு பாடத்தை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் கோளாறு.
ReplyDeleteஅடிப்படையே ஆட்டம் காணவைக்கும் கோளாறுகள் களையப்பட வேண்டியவை..